UPDATED : நவ 27, 2024 12:00 AM
ADDED : நவ 27, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புக்கு முதல் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.
இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதுநிலை மருத்துவம் பாடப் பிரிவுகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் முதல் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் சீட் கிடைத்த மாணவர்கள் வரும் 4ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அந்தந்த கல்லுாரியில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து சேர வேண்டும் என்று சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.