ஆதார் செயலி வழியே அடையாளம் சரிபார்ப்பு: மருத்துவ கவுன்சில் அறிமுகம்
ஆதார் செயலி வழியே அடையாளம் சரிபார்ப்பு: மருத்துவ கவுன்சில் அறிமுகம்
UPDATED : பிப் 05, 2026 09:21 PM
ADDED : பிப் 05, 2026 09:24 PM

சென்னை:
ஆதார் செயலி வழியே, அடையாள சரி பார்ப்பு முறையை, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிக்கை:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கி உள்ள, ஆதார் முக அங்கீகார செயலி வழியே, 'ஆப்லைன்' முறையில், ஆட்களின் அடையாளத்தை சரிபார்க்கும் புதிய நடைமுறையை, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மேற்கொண்டுள்ளது.
இம்முறையை பயன்படுத்தும், நாட்டின் முதல் 15 அமைப்புகளில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இணைந்துள்ளது. மேலும், முதல் மாநில மருத்துவ கவுன்சில் எனும் பெருமையை பெற்றுள்ளது.
'ஆதார் செயலி தேசத்துக்கு அர்ப்பணிப்பு' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் இடைக்கால குழுவின் ஒருங்கிணைப்பாளர் முருகநாதன், இதற்கான பதிவு சான்றிதழை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தலைமை செயல் அதிகாரி புவனேஷ்குமாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

