கடும் மன அழுத்தத்தால் விரக்தி; மருத்துவ மாணவி தற்கொலை
கடும் மன அழுத்தத்தால் விரக்தி; மருத்துவ மாணவி தற்கொலை
UPDATED : ஆக 20, 2025 12:00 AM
ADDED : ஆக 20, 2025 09:21 AM
பெலகாவி:
பெங்களூரை சேர்ந்த மனநல மருத்துவ மாணவி, அளவுக்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரை சேர்ந்தவர் பிரியா கார்த்திக், 27. பெலகாவி மருத்துவ அறிவியல் மையத்தில் மனநல மருத்துவம் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது அறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த மற்ற மாணவியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் அசோக் ஷெட்டி கூறியதாவது:
மாணவி பிரியா கார்த்திக், மாலை 6:30 மணிக்கு பணி முடிந்து, தன் அறைக்கு சென்றுள்ளார். இரவு 8:00 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் உட்கொண்டதாக தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே, எந்த மருந்து உட்கொண்டார் என்பது தெரிய வரும்.
அவர், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் கூட, மன அழுத்தத்தால், தனது கையை அறுத்துக் கொண்டார். இதற்காக பெங்களூரில் சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.பி.எம்.சி., போலீசார் விசாரிக்கின்றனர்.

