தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கருவிகள் கண்காட்சி மெடிக்கான் 2026 நாளை நிறைவு

மருத்துவ கருவிகள் கண்காட்சி மெடிக்கான் 2026 நாளை நிறைவு

மருத்துவ கருவிகள் கண்காட்சி மெடிக்கான் 2026 நாளை நிறைவு


UPDATED : நவ 22, 2026 06:57 PM

ADDED : நவ 22, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 06:57 PM ADDED : நவ 22, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கொடிசியா தொழில் வர்த்தக கண்காட்சி வளாகத்தில் அரங்கு ஏ, பி, ஹாலில் போயன்ட் மீடியா நடத்தும் மெடிக்கான் 2026 கண்காட்சியில் மருத்துவ உலகத்தின் கருவிகளை காணலாம். நாளை(நவ.22) நிறைவு பெறும் இந்த கண்காட்சி, காலை 10.30 முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது.

உடல் நலம் குறைந்தால், உறுப்புகள் செயலிழந்தால் அவற்றை தடுத்து காக்க, தாக்குப்பிடிக்க உதவும் கருவிகள், உதவிட படுக்கைகள், சேர்கள், மூச்சை நிலை நிறுத்தும் கருவிகள்...இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு கண்டுபிடிப்புகள் உள்ளதை அறியலாம்.

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படும் கத்தரிக்கோல் முதல், மைக்ராஸ்கோப் வரை, ரத்தத்தை பரிசோதித்து அளிக்கும் கருவிகள் முதல் மருந்துகளை அடுக்கி வைக்கும் ரேக்குகள் வரை பல்வேறு கருவிகள் அரங்குகளில் நிறைந்துள்ளன.

வீல் சேர்கள், படுக்கைகள், கைப்பிடி நடை உதவி குச்சிகள், சாதாரண சேர்கள் என பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. வாழ்நாளுக்கும் உதவும் இந்த கருவிகள் பெரும் பயன் தரும்.

மருத்துவமனைகளுக்கு தேவையான சி.டி. ஸ்கேன் முதல் அனைத்து கருவிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல முன்னணி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.

210 அரங்குகளில் பல்வேறு வகையான, உலகத்தரம் வாய்ந்த கருவிகள் அரங்குகளில் இடம் பெற்றுள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us