2027- 2028 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல் அமைச்சர் மகேஷ் தகவல்
2027- 2028 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல் அமைச்சர் மகேஷ் தகவல்
UPDATED : நவ 07, 2025 08:50 AM
ADDED : நவ 07, 2025 08:52 AM

திருச்சி:
''வரும் 2027 - 28 கல்வி ஆண்டில், மாநில கல்வி கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்,” என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
மாநில கல்வி கொள்கையை பின்பற்றி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை மாற்றியமைக்க, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டம், வரும் 2027 - 28ல் அமலுக்கு வரும். போட்டித் தேர்வுக்கு தயாராவது, அறிவியல், தொழில்நுட்ப அறிவை வளர்ப்பது உள்ளிட்டவற்றை மையப்படுத்தி, புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
புதிதாக, 13 பள்ளிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க வலியுறுத்தியுள்ளோம்.
அந்தந்த பகுதியில் இருக்கும் மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில், புதிய பள்ளிகள் செயல்படும். பின் புதிதாக பள்ளிக் கட்டடங்கள் கட்டப்படும். பள்ளிகளின் நுழைவாயிலில் கண்காணிப்பு கேமரா அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

