UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 10:36 AM
சேலம்:
கம்ப்யூட்டர் சயின்ஸை முக்கியப் பாடமாக எடுத்து பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஐ.எஸ்., அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்ட அலுவலகத்தில் ஒரு எம்.ஐ.எஸ்., அனலிஸ்ட் பணி உள்ளது. தற்காலிக பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.இ., அல்லது பி.டெக்கில் கணினி அறிவியல் அல்லது ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை அறிவியல்(ஐ.டி.,), கணினி அறிவியல் அல்லது இதர முதுநிலை கணினி அறிவியல் தொடர்பான படிப்புகள் படித்திருக்க வேண்டும். 30 வயதுக்கு உட்பட்டவராகவும், 3 ஆண்டு அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம், 25,000 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பங்களை வரும், 15க்குள் நேரிலோ அல்லது, இணை இயக்குனர்/திட்ட இயக்குனர், அறை எண், 207, மாவட்ட மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலக வளாகம், சேலம் - 636001 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அனுப்ப வேண்டும்.