sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு


UPDATED : மார் 27, 2025 12:00 AM

ADDED : மார் 27, 2025 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2025 12:00 AM ADDED : மார் 27, 2025 11:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்:
பெரியகுளத்தில் காணாமல் போன 7ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஜெயன், மதுசூதனன் ஆகியோரை கோவையில் போலீசார் மீட்டனர்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் அதே பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு மகன்களை காணவில்லை என தென்கரை போலீசில் புகார் அளித்தனர்.

மாணவர்களின் நண்பர் ஒருவர் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். எஸ்.ஐ., கர்ணன், கோவையில் தனது போலீஸ் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இருவரது படங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியில் எஸ்.ஐ., கர்ணன் மாணவர்களை மீட்டு நேற்று மதியம் மாணவர்களை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த், எஸ்.ஐ., கர்ணனை பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us