sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் நவீன கருவி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

/

இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் நவீன கருவி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் நவீன கருவி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் நவீன கருவி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு


UPDATED : மார் 05, 2026 03:15 PM

ADDED : மார் 05, 2026 03:17 PM

Google News

UPDATED : மார் 05, 2026 03:15 PM ADDED : மார் 05, 2026 03:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் நிறுவப்பட்ட குழந்தைகளின் இதய துடிப்பை பதிவு செய்யும் நவீன கருவி பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்திரா காந்தி அரசு மருத்துவ மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையில், கருப்பையில் வளரும் குழந்தையின் இதயத் துடிப்பை பதிவு செய்து கண்காணிக்கும் நவீன கருவியும், பல்நோக்கு நோயாளி கண்காணிப்பு சாதனங்களும் சமூக பொறுப்பு திட்ட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்வர் ரங்கசாமி, இயக்குநர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த கருவிகளுக்கான நிதியை எல்.எம்.எப்., ஸ்கொயர் லெக் சஞ்சய் ராமசுவாமி, புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் - 167, மெட்ராஸ் அமிகோஸ் ரவுண்ட் டேபிள் - 260, ரவுண்ட் டேபிள் இந்தியா பவுண்டேஷன், கோயம்புத்துார் அனமல்லைஸ் ஏஜென்சீஸ் நிறுவனம், இணைந்து வழங்கி இருந்தன. இவர்களின் சமூகப் பொறுப்புணர்வு பாராட்டப்பட்டது.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “அரசு மற்றும் சேவை அமைப்புகளின் இணைந்த முயற்சி பொதுச் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும். இத்தகைய முயற்சிகள் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உயிர் பாதுகாப்பை உயர்த்தும். சமூக அக்கறையுடன் கூடிய இந்த உயர்ந்த பங்களிப்பு, பொதுச் சுகாதாரத் துறையில் நீடித்த நன்மையை ஏற்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பாதுகாப்பான தாய்மையும் ஆரோக்கியமான புதிய தலைமுறையும் உருவாகும் பாதையை இது உறுதிப்படுத்துகிறது,” என்றார்.

நிகழச்சியில் ரமேஷ் எம்.எல்.ஏ., மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை தலைவர் சபீதா உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us