UPDATED : செப் 28, 2024 12:00 AM
ADDED : செப் 28, 2024 05:36 PM

சென்னை:
பிரதமர் மோடியின் மூன்றாம் முறை ஆட்சிக் காலத்தில் முதல் 100 நாட்களில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் பட்டியலிடப்படுள்ளன.
மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் எனும் இன்சூரன்ஸ் திட்டம், குழந்தைகளுக்கான தடுப்பூசி தகவல்களை பதிவு செய்யும் யூவின் போர்ட்டல், புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்கவரி ரத்து உள்ளிட்டவைகள் குறிப்பிடத்தக்கனவாகும். மத்திய அரசு இந்த 2024-25 நிதியாண்டில் சுகாதார துறைக்காக 31,550 கோடியிலிருந்து 36,000 கோடியாக அதிகரித்து நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும் கல்வி, விஞ்ஞானம், உயிரி ஆராய்ச்சிகளுக்காக நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் திறப்பு, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிதியம், விஞ்ஞான் தாரா திட்டம், பயோஇ3 கொள்கை போன்ற திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடியின் சாதனை திட்டங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.