பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு 7ம் தேதி மாப் அப் கவுன்சிலிங்
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு 7ம் தேதி மாப் அப் கவுன்சிலிங்
UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:19 AM
புதுச்சேரி:
பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு வரும் 7 தேதி மாப் அப் கவுன்சிலிங் நடக்கும் என சென்டாக் அறிவித்துள்ளது.
இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள் நேரில் வந்து பங்கேற்க வேண்டும். பிற மாநில மாணவர்களும் பங்கேற்கலாம்.
காலை 10 மணிக்கு புதுச்சேரி மாணவர்களுக்கு பதிவு நடக்கின்றது. 10.30 மணிக்கு விடுதலை போராட்ட வீரர், மாற்றுதிறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர் பிரிவினை சேர்ந்த புதுச்சேரி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கின்றது.
11 மணிக்கு எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மீனவர், முஸ்லீம் பிரிவு மாணவர்களுக்கும், 11.30 மணிக்கு அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கின்றது. பிற மாநில மாணவர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் பதிவு மதியம் 2 மணிக்கு துவங்குகின்றது.
புதுச்சேரி பிராந்திய மாணவர்களுக்கு இ.சி.ஆர்., காமராஜர் மணிமண்டப சென்டாக் வளாகத்திலும், காரைக்கால் மாணவர்களுக்கு காமராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலும், மாகியில் மகாத்மா காந்தி கலை அறிவியல் கல்லுாரியிலும், ஏனமில் எஸ்.ஆர்.கே., கலை அறிவியல் கல்லுாரி வளாகத்திலும் இந்த கவுன்சிலிங் நடக்கும் என சென்டாக் அறிவித்துள்ளது.