UPDATED : செப் 20, 2026 01:36 PM
ADDED : செப் 20, 2026 01:37 PM
அ நிறம் | அளவு
சேலம்:
சூரமங்கலம் மண்டலம் டாக்டர் காலனியில் உள்ள, காமராஜர் காலை உணவு திட்டம் தயார் செய்யும் இடத்தில் உணவின் தரத்தை, சேலம் மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் நேற்று, ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மாநகராட்சியில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, 125 பள்ளிகளில், 14,577 மாணவ, மாணவியரும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, 81 பள்ளிகளில், 15,611 மாணவ, மாணவியர் என, 206 பள்ளிகளில், 30,188 மாணவ, மாணவியர், காமராஜர் காலை உணவு திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.
இவர்களுக்கு காலை உணவு, 5 இடங்களில் தயார் செய்யப்பட்டு, 13 வாகனங்களில், அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
