UPDATED : மார் 28, 2024 12:00 AM
ADDED : மார் 28, 2024 05:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் க்ரூஸ் சொல்யூஷன்ஸ் எல்எல்பி நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்வில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் க்ரூஸ் சொல்யூஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் சத்ய நாராயணன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், தற்போது வேலைவாய்ப்புக்குப் பெரிதும் தேவைப்படும் திறன்களையும், துறை சார்ந்த அறிவையும், மாணவிகள் பெறும் வகையில் வகுப்புகள், பயிலரங்குகள், நடைமுறைப் பயிற்சி வழங்கப்படும்.
தொழில்துறையில் மாணவிகளுக்குத் தேவையான மென்திறன்களை கற்றுக்கொள்ளவும், வாய்ப்புகள் வழங்கப்படும் என்று, கல்லுாரி முதல்வர் சித்ரா தெரிவித்தார்.

