UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM
ADDED : ஜூலை 16, 2025 12:22 PM

காஞ்சிபுரத்தில் செயல்படும் மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்டு மானுபேக்சரிங்கில் எம்.டெக்., படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்புகள்:
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் - டேட்டா சயின்ஸ் அண்டு ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ்
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அண்டு வி.எல்.எஸ்.ஐ., சிஸ்டம்ஸ்
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - ஆர்.எப்., அண்டு மைக்ரோவேவ் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - இன்டெலிஜெண்ட் மெக்கானிக்கல் சிஸ்டம் டிசைன்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - ஸ்மார்ட் மானுபேக்சரிங்
தகுதிகள்:
பி.இ., / பி.டெக்., அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
'கேட்' தேர்வு தகுதிபெற்ற மற்றும் தகுதிபெறாத மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://admissions.iiitdm.ac.in/Mtech_Spot_Admission/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 30
விபரங்களுக்கு:
https://www.iiitdm.ac.in/admissions/pg