UPDATED : ஜூன் 12, 2025 12:00 AM
ADDED : ஜூன் 12, 2025 06:42 PM
 சென்னை: 
தொழில்துறை - கல்வித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ), ஐடிசி ஹோட்டல்கள், மற்றும் சுவிஸ் கல்வி நிறுவனம் இஹெச்எல் ஆகியோர் இணைந்து இண்டஸ்ட்ரி-அகாடெமியா கனெக்ட் 2025 என்ற நிகழ்வை இன்று சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடத்தினர்.
டெல்லி, ஆக்ரா, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தமிழ்நாட்டின் கல்வித் துறையையும் தொழில்துறையையும் ஒருங்கிணைக்க இப்போது சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் சௌகதா ராய் சௌத்ரி கூறுகையில், திறன்கள் உருவாகும் சூழலை கல்வி-தொழில் இணைப்பு கொண்டு உருவாக்க வேண்டும். இது பாடத்திட்டம் மாற்றத்தை விட மேலான மாற்றம், என்றார்.
ஐடிசி ஹோட்டல்ஸ் திறமை மேலாண்மை துணைத் தலைவர் நிலேஷ் மித்ரா கூறுகையில், ஹாஸ்பிடாலிட்டி துறையில், வெற்றி என்பது தகவமைப்பு, துல்லியமான நடைமுறை  ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது, கோட்பாட்டளவில் மட்டும் கற்பிக்க முடியாத குணங்கள். ஐடி சிஹோட்டல்ஸ் சிஐஐ உடன் இணைந்து வழங்கும் இஹெச்எல் திட்டத்தின் விஇடி போன்ற முயற்சிகள், மாணவர்களுக்கு தொழில் அறிவைக் கொண்டு வருகின்றன,  என்றார்.
சிஐஐ ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் திட்டத் தலைவர் அனிஷ் திமான் கூறுகையில், கல்வித் திட்டங்கள் தொழில்துறையின் மாற்றங்களைத் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்காக தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், என்றார்.

