UPDATED : அக் 13, 2026 06:48 PM
ADDED : அக் 13, 2026 06:50 PM
விருத்தாசலம்:
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொழிற்கல்வி பள்ளி மாணவர்களுக்கு காளாண் வளர்ப்பு பயிற்சி துவங்கியது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு காளாண் வளர்ப்பு குறித்த திறன் பயிற்சி, நேற்று முதல், வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதனை, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார்.
பேராசிரியர் சிவசங்கர் காளாண் வளர்ப்பு முறைகள் குறித்து அறிமுக உரையாற்றினார். அப்போது, வருங்காலத்தில் காளாண் வளர்ப்பு மூலம் மாணவர்கள் தொழில்முனைவோராக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் என ஊக்கம் தரப்பட்டது.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருள்மொழி, இருப்புக்குறிச்சி ரங்கநாதன், மங்கலம்பேட்டை பாபாஜி உள்ளிட்டோர் உறுதுணையுடன் தொழிற்கல்வி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
