தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'நியாயமான முறையில் விசாரணை நடத்தணும்'

'நியாயமான முறையில் விசாரணை நடத்தணும்'

'நியாயமான முறையில் விசாரணை நடத்தணும்'


UPDATED : நவ 10, 2026 01:05 PM

ADDED : நவ 10, 2026 01:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 01:05 PM ADDED : நவ 10, 2026 01:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை ஈ.வெ.ரா., அறிவுலகம் நுாலகத்துக்கான புத்தகங்கள், தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது. பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடம் 'கூகுள் ஷீட்' படிவத்தில் புத்தக விபரங்கள் பெறப்பட்டு, தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களில் வாங்கிய புத்தகங்கள் ஏ.ஐ., மூலம் தயாரிக்கப்பட்டவையாக உள்ளன. இதில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொருளாளர் ரமணி கூறியதாவது:

இளம் தலைமுறையினர் அறிவுப்பூர்வமான பல்வேறு புத்தகங்களை படிப்பதற்கான வாய்ப்பாக இந்நுாலகம் அமைந்திருக்கிறது. ஒரு லட்சம் புத்தகங்கள், அறிவியல் சாதனங்கள், விண்நோக்கிய கருவிகள் உள்ளன. புத்தகங்கள் வாங்கியதில் தவறு நடந்திருப்பதாக சொல்கின்றனர். எந்த காலகட்டத்தில் நடந்திருக்கிறது என தெரியவில்லை.

தேர்வு குழுவினரிடம் பேசிய போது, 'புத்தகங்கள் பட்டியலை ஏற்கனவே தயார் செய்து கொடுத்து விட்டோம்; எங்களது அளவில் இதுபோன்ற பதிப்பகங்கள் வரவில்லை' என்றனர். அரசுக்கோ, அமைச்சருக்கோ தெரியாமல் நடந்திருக்கலாம்; அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கலாம். நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும். யார் தவறு செய்தார்களோ, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தினமும் பலரும் வந்து செல்வதால், குற்றச்சாட்டுக்கு உரிய புத்தகங்களை உடனடியாக அகற்ற வேண்டும். கொள்முதல் செய்த நடைமுறை தவறு.

இவ்வாறு, அவர் கூறினார்.

எழுத்தாளர் நாதன் கூறுகையில், ''அறிவுலகத்தின் மீது நடத்தப்பட்ட போர்; அயோக்கியத்தனம். தெரிந்தே செய்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தேர்வு குழுவினருக்கே தெரியாமல் தனிப்பட்ட நபர்கள் செய்திருக்கிறார்கள். அவர்களை அரசு கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலையான நடைமுறை

புத்தக வாசிப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “மக்களுக்கு நல்ல புத்தகங்களை தர வேண்டும். சில புத்தகங்கள் படிப்பதற்கே உகந்தவை அல்ல. எண்ணிக்கைக்காக வைக்கப்பட்டதை போல் தெரிகிறது. அவற்றை அகற்ற வேண்டும். மாற்றுப்புத்தகங்கள் வைக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகள், கம்பெனிகளுக்கு புத்தகங்கள் வாங்கும்போது, கமிட்டி அமைத்து தேர்வு செய்வர். இங்கு பணம் கையாடல் செய்வதற்காகவே புத்தகங்கள் வாங்கியது போல் தெரிகிறது.

புத்தகம் படிக்க யாரும் வர மாட்டார்கள்; பில்டிங்கை பார்த்து விட்டுச் சென்று விடுவார்கள் என நினைத்து கொள்முதல் செய்திருப்பார்கள் போலிருக்கிறது. சென்னையில் உள்ள நுாலகங்களில் இருக்கும் புத்தகங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

''எதிர்காலத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ய நிலையான நடைமுறை வகுக்க வேண்டும். கமிட்டி அமைப்பது அவசியம்; தேர்வு செய்த பட்டியலை தணிக்கை செய்ய வேண்டும். கொள்முதல் செய்தவற்றை சரிபார்த்த பிறகே பொதுவெளியில் வைக்க வேண்டும்,” என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us