சிறந்த கல்லுாரிக்கான விருது பெற்ற முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி
சிறந்த கல்லுாரிக்கான விருது பெற்ற முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி
UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 08:17 AM
ராசிபுரம்:
ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி, சிறந்த கல்லுாரிக்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
சென்னையில், தி இன்ஸ்டிடியூசன் ஆப் இன்ஜினியர்ஸ், இந்தியா நிறுவனம் சார்பில், தமிழ்நாடு மாநில மையத்தில், 57வது பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பொறியியல் துறையில் சாதனை படைத்த கல்லுாரி, பேராசிரியர்கள், மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சிறப்பான கல்வி செயல்பாடுகளுக்காக, ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு, சிறந்த கல்லுாரிக்கான, அகாடமிக் எக்ஸலன்ஸ் விருது -2024 வழங்கப்பட்டது. இவ்விருதை முதல்வர் மாதேஸ்வரன், கல்லுாரி சார்பில் பெற்றுக்கொண்டார்.
மேலும், தி இன்ஸ்டிடியூசன் ஆப் இன்ஜினியர்ஸ், சேலம் மையம் சார்பில், 57வது பொறியாளர்கள் தின விழா கொண்டாட்டத்திலும், முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு, சிறந்த கல்லுாரிக்கான பாராட்டு விருது - 2024 வழங்கப்பட்டது. இது தவிர மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக கல்லுாரியில் நடத்தப்பட்ட கருத்தரங்கு, போட்டிகள், விழாக்கள் ஆகியவற்றின் அடிப்படையின் சிறந்த மாணவர் அத்தியாயத்திற்கான விருது-2024 இக்கல்லுாரிக்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் பொறியாளர்களுக்கான விருது, கல்லுாரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியர் சுந்தருக்கு வழங்கப்பட்டது. பொறியியல் கல்லுாரி பிரிவில் சிறந்த மாணவர்களுக்கான ஏ.பி.ஜே., அப்துல் கலாம் விருது - 2024 கல்லுாரி மாணவர் சரண், மாணவி சினேகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதுகளை பெற்ற முதல்வர், பேராசிரியர், மாணவர்களை, ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர் கந்தசாமி, டிரஸ்டி அம்மணி கந்தசாமி, செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் ராகுல் ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.