தேர்வெழுதிய மாணவர்களின் என் கல்லுாரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி
தேர்வெழுதிய மாணவர்களின் என் கல்லுாரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி
UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 11:42 AM
ஊட்டி:
நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், என் கல்லுாரி கனவு என்ற உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில் துவங்கியது.
அதன்படி, மாணவர்களின் கல்வி இடை நிற்றலை தடுத்து, அடிப்படை கல்வி பயின்றுள்ள அனைத்து மாணவர்களையும் விடுதலின்றி உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவது இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
மாவட்டத்தில், 40 அரசு பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் பள்ளிகள், 24 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, என மொத்தம், 85 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
2023-24ம் கல்வி ஆண்டில், பிளஸ்-2 தேர்வு எழுதி, தேர்வு முடிவினை நோக்கி காத்திருக்கும், 2,561 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது; அதிக வேலை வாய்ப்பு மேற்படிப்பை தேர்வு செய்வது; அதற்கான வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், அரசால் வழங்கப்படும், 3,500 முதல், 36 லட்சம் ரூபாய் வரையிலான கல்வி உதவித்தொகை குறித்த விளக்கங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.
தவிர, உயர் கல்வியில் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம் குறித்த படிப்புகள் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் உள்ள துணை படிப்புகள் குறித்தும் விளக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன், மதிப்பெண்கள் அடிப்படையில் தாமதம் இன்றி, உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குறைந்த மதிப்பின் பெற்றவர்கள் அல்லது தோல்வி அடைந்து மாணவர்கள் இடை நின்றலின்றி பாலிடெக்னிக், தொழிற்பயிற்சியில் சேர்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், உயர்கல்வி குறித்த மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில், பிளஸ்-டூ தேர்வு எழுதிய, 300 மாணவர்கள் பங்கேற்றனர்.