UPDATED : மார் 04, 2025 12:00 AM
ADDED : மார் 04, 2025 10:27 AM
மதுரை:
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் தேசிய தர மதிப்பீட்டு குழு(நாக் கமிட்டி) ஆய்வு நடந்தது.
மேற்கு வங்காளம் எஸ்.கே.பி., பல்கலை முன்னாள் துணைவேந்தர் தீபக் ரஞ்சன் மண்டல் தலைமையில் கர்நாடகா இந்திரகாந்தி தேசிய பல்கலை கூடுதல் இயக்குனர் சங்கவரம் ராதா, நாக்பூர் கெவல்ரமணி கன்யா மஹாவித்யாலயா முதல்வர் ஊர்மிளா ஆய்வு செய்தனர்.
நாடார் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், கல்லுாரி தலைவர் அசோகன், துணைத் தலைவர் பொன்னுச்சாமி, செயலாளர் சுந்தர், இணைச் செயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் நல்லதம்பி வரவேற்றனர்.
கல்லுாரியின் 5 ஆண்டு நிகழ்வுகள் குறித்து முதல்வர் ராமமூர்த்தி, கல்லுாரியின் தேசிய தர மதிப்பீட்டு குழு தலைவர்கள் விளக்கினர்.
பேராசிரியர்களின் தகுதி, திறன் கல்லுாரியின் கட்டமைப்பு நிர்வாகத்தை பாரட்டினர். தேசிய தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் மாதவராஜன், துணை முதல்வர் செல்வமலர் ஒருங்கிணைத்தனர்.
மூத்த பேராசிரியர் மில்டன் பிராங்களின் டேனியல், பொருளியல்துறைத் தலைவர் பிரெட்ரிக், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஸ்ரீதர் ஏற்பாடுகளை செய்தனர்.