மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பின் பெயர் மாற்றம் செய்யப்படாது: கல்வித்துறை தகவல்
மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பின் பெயர் மாற்றம் செய்யப்படாது: கல்வித்துறை தகவல்
UPDATED : செப் 19, 2026 03:22 PM
ADDED : செப் 19, 2026 03:24 PM

சென்னை:
'பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பின், அரசிதழில் பெயர் மாற்றம் செய்தால், மதிப்பெண் சான்றிதழில், பெயர் திருத்தம் செய்யப்படாது' என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, சி.பி.எஸ்.இ., மற்றும் பிற மாநிலத்தில் படித்து, மேல்நிலைக் கல்வியை, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளியில், உண்மைத்தன்மை சான்றிதழில், தேர்வரின் பெயரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவாக குறிப்பிட்டு, திருத்தம் கேட்கும், மேல்நிலைப் பள்ளி தேர்வு மதிப்பெண் சான்றிதழுடன் இணைத்து, தலைமை ஆசிரியர் வழியே, அரசு தேர்வுகள் இயக்கத்துக்கு அனுப்ப வேண்டும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன், தமிழக அரசின் அரசிதழில் பெயர் மாற்றம் செய்திருந்தால் மட்டுமே, மதிப்பெண் சான்றிதழில் பெயர் மற்றும் தலைப்பெழுத்து தொடர்பான திருத்தம் மேற்கொள்ளப்படும்.
தேர்வெழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறப்பட்ட பின், அரசிதழில் பெயர் மாற்றம் செய்தால், மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
