UPDATED : ஜூலை 07, 2026 06:03 PM
ADDED : ஜூலை 07, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
கோவை:
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்ட நாப்கின் எரிப்பு இயந்திரம், சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா பேசுகையில், 'சூரிய சக்தியில் இயங்கும் இந்த இயந்திரம் நாப்கின்களை சுகாதாரமான முறையில் அகற்றும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் பங்களிக்கிறது.
பெண்களின் சுகாதாரத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், கழிவு மேலாண்மையிலும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. எனவே மாணவிகள் இது போன்ற திட்டங்களை உருவாக்க முன் வர வேண்டும்,' என்றார்.
