தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாசாவின் 22 ஆண்டு விண்வெளி தொலைநோக்கி எரிந்து சாம்பல்

நாசாவின் 22 ஆண்டு விண்வெளி தொலைநோக்கி எரிந்து சாம்பல்

நாசாவின் 22 ஆண்டு விண்வெளி தொலைநோக்கி எரிந்து சாம்பல்


UPDATED : நவ 06, 2026 01:29 PM

ADDED : நவ 06, 2026 01:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 01:29 PM ADDED : நவ 06, 2026 01:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
உயிர்ப்பிக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், 'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின், 22 ஆண்டு பழமையான விண்வெளி தொலைநோக்கி அதன் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி பூமியை நோக்கி வந்தது. இந்தோனேஷியாவின் வளிமண்டலத்தில் அது எரிந்து சாம்பலானது.

பிரபஞ்சத்தில் நிகழும் மிக சக்திவாய்ந்த மற்றும் ஒளிரும் வெடிப்புகளை கொண்டவை 'காமா' கதிர்கள். அவை எங்கு, எப்போது நிகழ்கின்றன என்பது குறித்து துல்லியமாக கண்டறிவதற்காக, 2004ல், 'நீல் கெஹ்ரல்ஸ் ஸ்விப்ட்' என்ற விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டது.

முதலில் இரண்டு ஆண்டு மட்டுமே செயல்படும் விதமாக திட்டமிட்டு இத்தொலைநோக்கி அனுப்பப்பட்டது. ஆனால், 22 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு சாதனை படைத்தது. இத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும், தொலைநோக்கி பழுதடையவில்லை. விண்வெளியில் இருந்து தொடர்ந்து அறிவியல் தரவுகளையும் வழங்கி வந்ததால், அதன் சேவையை மேலும் சில ஆண்டுக்கு நீட்டிக்க நாசா விரும்பியது.

ஆனால், ஸ்விப்ட் தொலைநோக்கி, வளிமண்டலத்தில் ஏற்பட்ட இயற்கையான தடையால் அதன் சுற்றுவட்ட பாதையில் இருந்து கீழிறங்கத் தொடங்கியது. இந்த தொலைநோக்கிக்கென தனியாக இன்ஜின் எதுவும் இல்லாததால், அதை மேலே உயர்த்த முடியாமல் போனது.

சுற்று வட்ட பாதையின் உயரம் குறைய குறைய, பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, உலகில் உள்ள எதேனும் ஒரு நாட்டின் மீது, ஸ்விப்ட் தொலைநோக்கி விழும் அபாயம் உருவானது.

இதையடுத்து, ரோபோடிக் விண்கலம் வாயிலாக தொலைநோக்கியை பூமிக்கு இழுத்து வரும் முயற்சியை நாசா மேற்கொண்டது. ஆனால், அம்முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, 1,452 கிலோ எடை கொண்ட ஸ்விப்ட் தொலைநோக்கி வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. மணிக்கு, 1,235 கி.மீ., வேகத்தில் செல்வது ஒலியின் வேகம் என்றழைக்கப்படும். இந்த தொலைநோக்கி, ஒலியை விட 22 மடங்கு வேகத்தில் வந்தது.

விண்ணில் வரும் போதே, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் வான் பரப்பில் அது எரிந்து சாம்பலானது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த தொலைநோக்கி ஆயிரக்கணக்கான சூப்பர் நோவாக்கள், விண்மீன்களை பிரிக்கும் கருந்துளைகள் மற்றும் வால்மீன்களை கண்காணித்ததுடன், 7,000க்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்களுக்கு தேவையான தரவுகளை வழங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us