தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடேசன் பள்ளி மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை

நடேசன் பள்ளி மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை

நடேசன் பள்ளி மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை


UPDATED : மே 19, 2026 04:48 PM

ADDED : மே 19, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 04:48 PM ADDED : மே 19, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மண்ணிவாக்கம்:
நடேசன் வித்யாசாலா பள்ளி மாணவ மாணவியர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் ஸ்ரீநடேசன் வித்யாசாலா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 330 மாணவ மாணவியரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவியர், அபிநயா மற்றும் கவுசிகா ஆகியோர், 600க்கு 590 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தனர். மாயாஸ்ரீ 589 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், பாத்திமா தபசும் 581 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.

தேர்வு எழுதிய மாணவ மாணவியரில் 100க்கும் மேற்பட்டோர் 500 மதிப்பெண்களுக்குமேல் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் - 15; கணக்குப்பதிவியல் - 12; வணிகவியல் - 5; கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - 5; வணிகக்கணிதம் - 4; பொருளாதாரம் - 4; தமிழ் - 4; சமஸ்கிருதம் - 7; பிரெஞ்ச் - 1; ஆங்கிலம் - 1 என மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நுாற்றுக்கு நுாறு என்ற 'சென்டம்' மதிப்பெண்கள் பெற்று அசத்தினர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியரை, பள்ளி தாளாளர் மற்றும் தலைமை முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் ஆனந்தி மணி ஆகியோர், பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us