தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் தேசிய புத்தக கண்காட்சி

புதுச்சேரியில் தேசிய புத்தக கண்காட்சி

புதுச்சேரியில் தேசிய புத்தக கண்காட்சி


UPDATED : நவ 24, 2025 08:48 AM

ADDED : நவ 24, 2025 08:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2025 08:48 AM ADDED : நவ 24, 2025 08:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் அடுத்த மாதம் 19ம் தேதி தேசிய புத்தக கண்காட்சி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.

புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 29-வது தேசிய புத்தக கண்காட்சி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.

கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி முதலான பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமை க்கப்பட உள்ளன.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. இக்கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் 15 நுால்கள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்களுக்கு, தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

நுால்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். இவ்வாண்டு புத்தகம் வாங்கும் வாசகர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பெற்று ஒவ்வொரு நாளும் ரூ.1,000 மதிப்பிலா ன புத்தகங்கள் பரிசாக வழங்கபெறும்.

தேசிய புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பல ஆண்டுகளாக பங்கேற்கும் புத்தக நிறுவனங்களுக்கு புத்தக சேவா விருதுகளும், கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தவர்களுக்கு புத்தக சேவா ரத்னா விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ், ஆயிரத்தின் மடங்கில் நட்சத்திர சான்றிதழ்களும் வழங்கப்படும். 10,000க்கும் அதிகமாக புத்தகம் வாங்குபவர்களுக்கு புத்தகச் சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

கண்காட்சியையொட்டி, தினமும் பேச்சு, கவிதைப் போட்டிகள் மாலை 6: 00 மணிக்கு நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9087872555 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கண்காட்சி ஏற்பாடு குழு அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us