UPDATED : நவ 06, 2025 07:35 AM
ADDED : நவ 06, 2025 07:36 AM
புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியின் வணிகவியல் துறை, கல்லுாரி தர உறுதியளிப்பு குழு சார்பில், 'வணிகம் மற்றும் மேலாண்மை தளங்களில் டிஜிட்டல் மாற்றங்கள்' என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய மாநாடு நடந்தது.
கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் சிவக்குமார், உறுதியளிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வாழ்த்தி பேசினர்.
ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரி ஆணையர் மிலிந்த் லஞ்சேவர், பல்கலைக்கழக மேலாண்மை மைய டீன் நடராஜன் ஆகியோர் வணிகம் மற்றம் மேலாண்மை தளங்களில் டிஜிட்டல் மாற்றங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தனியார் நிறுவன தலைவர்கள் சண்முகானந்தம்,மணிமாறன் கருத்துரை வழங்கினார். காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய வணிகவியல் துறை பேராசிரியர்கள் அழகய்யா, கற்பகம், பிரதீப்குமார் சிங், யமுனா சிறப்புரை ஆற்றினர்.எம்.எஸ்.எம்.இ., தொழில் மைய இணை பொது மேலாளர் அமித் நைன் சான்றிதழ் வழங்கினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் நோயலின் பிபியானா அருள் மேரி நன்றி கூறினார்.
மாநாட்டில் நாடு முழுதும் உள்ள உயர்கல்வி மையங்களை சார்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், முதுகலை, இளங்கலை மாணவர்கள், தொழில்துறை வல்லுநர்கள் 250க்கும் மேற்பட்ட கருத்தாய்வு நுால்களை சமர்ப்பித்தனர். பின், சமர்ப்பிக்கப்பட்ட கருத்தாய்வுகளின் தொகுப்பு நுால் வெளியிடப்பட்டது.

