UPDATED : நவ 13, 2025 04:49 PM
ADDED : நவ 13, 2025 04:50 PM

சென்னை:
சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வணிக மேலாண்மையில் வளர்ந்து வரும் அணுகுமுறைகள் குறித்த தேசிய மாநாடு (என்சிஇஏபிஎம்-2025) நடைபெற்றது.
இந்த மாநாடு கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் நுண்ணறிவுகளை பரிமாறிக்கொள்ளும் தளமாக அமைந்தது. விழாவின் போது என்சிஇஏபிஎம்-2025 மாநாட்டு சிற்றேடு வெளியிடப்பட்டது.
தலைமை விருந்தினராக, தென் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறையின் மூத்த துணைத் தலைவர் மற்றும் விஎன்எஸ் சட்ட நிறுவனர் சிவசங்கர் கலந்து கொண்டு, தொழில்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு உரையாற்றினார்.
விழாவை பிரபாதேவி வரவேற்றார். எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் பாபு பாராட்டு உரையாற்றி, ஆராய்ச்சி சார்ந்த கல்விச் சூழலை மேம்படுத்துவதில் பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். மாநாட்டின் நிறைவில் உதவி பேராசிரியர் ரூபி எவாஞ்சலின் நன்றி உரையாற்றினார்.

