மனநல மேம்பாட்டிற்கு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் - கடலோர காவல்படை ஒப்பந்தம்
மனநல மேம்பாட்டிற்கு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் - கடலோர காவல்படை ஒப்பந்தம்
UPDATED : ஆக 15, 2025 12:00 AM
ADDED : ஆக 15, 2025 10:36 AM

காந்திநகர்:
மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், இந்திய கடலோர காவல்படை மற்றும் வடமேற்கு பிராந்திய கடலோர காவல்படை நலச்சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
காந்திநகர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஜஸ்பீர்கவுர் ததானி, இந்திய கடலோர காவல்படை மற்றும் நலச்சங்க தலைவர் அர்ச்சனா சஷி குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், டாக்டர் ஜஸ்பீர் ததானி மற்றும் நடத்தை அறிவியல் மற்றும் தடய அறிவியல் புலனாய்வு பள்ளி செயல் இயக்குநர் டாக்டர் நூரின் சவுத்ரி வழிகாட்டுதலின் கீழ், பயிற்சி பெற்ற நிபுணர்கள் கடலோர காவல்படையினரும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மனநலம் குறித்த நேரடி அமர்வுகளை நடத்த உள்ளனர்.
இந்த முயற்சி, நாட்டிற்கு சேவை செய்வோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் மனநல தேவைகளை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

