UPDATED : ஏப் 25, 2025 12:00 AM
ADDED : ஏப் 25, 2025 10:35 AM
கோவை:
அவினாசிலிங்கம் பல்கலையின் பிரிண்டிங் தொழில்நுட்பத்துறை சார்பில், உலக சாதனை முயற்சியாக, 18க்கு 12 அடி அளவிலான தேசியக்கொடி பிரிண்ட் செய்யப்பட்டது.
கோவை பன்னிமடையில், அவினாசிலிங்கம் பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரியின் பிரிண்டிங் தொழில்நுட்பத்துறை, திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் அகில இந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எம்.பி.,) ஆகியவற்றுடன் இணைந்து, உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 18 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட நமது நாட்டின் தேசியக்கொடியை ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் அச்சிட்டு உலக சாதனை முயற்சி நடத்தப்பட்டது. கல்லுாரியின், 23 மாணவியர் இச்சாதனையில் ஈடுபட்டனர். பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் தலைமை வகித்தார்.
பதிவாளர் (பொறுப்பு) இந்து, டில்லி அகில இந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பு கவுரவ பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

