UPDATED : ஏப் 20, 2024 12:00 AM
ADDED : ஏப் 20, 2024 11:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிக்கு, தமிழக அணிக்கு கோவையை சேர்ந்த மூவர் தேர்வாகியுள்ளனர்.
தேசிய அளவிலான 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'சுவாமி விவேகானந்தா கால்பந்து சாம்பியன்ஷிப்' கால்பந்து போட்டி, சத்தீஸ்கர் மாநிலம் நரேன்பூரில் ஏப்., 12 முதல் மே 22 வரை நடக்கிறது.
இதில் நாட்டின் பல்வேறு மாநில அணிகள் பங்கேற்கின்றன. தமிழக அணிக்கான தேர்வு மார்ச் 10ம் தேதி திண்டுக்கலில் நடந்தது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் பங்கேற்றனர்.
அதிலிருந்து ஸ்ரீ ராகவேந்திரா வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் விகாஷ், ஜெயசூர்யா மற்றும், பர்ஸ்ட் கிக் ஸ்கூல் ஆப் சாக்கரில் பயிற்சி பெறும் முகமது சப்வான் ஆகிய மூவர் அணியில் தேர்வாகினர்.