UPDATED : பிப் 19, 2025 12:00 AM
ADDED : பிப் 19, 2025 09:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த கட்டுரை போட்டியில், 70 மாணவர்கள் பங்கேற்றனர்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கோவை மண்டல அறிவியல் மையத்தில் நேற்று முன்தினம் நடந்த ஓவியப்போட்டியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளான நேற்று, எட்டாம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு, கட்டுரை போட்டி நடந்தது. காலநிலை நெருக்கடி பிரச்னையை எதிர்கொள்வது குறித்த தலைப்பில் மாணவ, மாணவியர், 70 பேர் ஆர்வமுடன் கட்டுரை போட்டியில் பங்கேற்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று, வினாடி-வினா போட்டி நடக்கிறது.

