தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய தொழில்நுட்பம் மேலாண்மை ஆய்வரங்கம்

தேசிய தொழில்நுட்பம் மேலாண்மை ஆய்வரங்கம்

தேசிய தொழில்நுட்பம் மேலாண்மை ஆய்வரங்கம்


UPDATED : பிப் 24, 2026 11:36 AM

ADDED : பிப் 24, 2026 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2026 11:36 AM ADDED : பிப் 24, 2026 11:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:
சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் அனைத்து துறைகள், மாணவர் அமைப்புகள் சார்பில் ஞான்மித்ரா 2026 என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆய்வரங்கம் இரு நாட்கள் நடந்தது.

இதில் 19 விதமான பயிலரங்குகள் உட்பட 69க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்தது. 1110க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதன்முறையாக 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி நான்கு முக்கிய கருத்துகளை கொண்டு நடந்தது.

இதில் 25க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டது. நிறைவு விழாவில் சென்னை குளோபல் டெக்னாலஜி இயக்குனர் சாய் நாராயணன், கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி முதல் பரிசை வென்றனர். ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறை துணை பேராசிரியர் வெனிட்டா ராஜ், மின்னியல் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியர் சுந்தர மகாலிங்கம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us