பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம்
பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம்
UPDATED : அக் 06, 2026 01:32 PM
ADDED : அக் 06, 2026 01:32 PM
சிவகாசி:
சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சிவில் பொறியியல் துறை, சிவில் பொறியியல் சங்கம் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி வாழ்த்தினர்.
கோவை பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம், பராமரிப்பு வட்டம் கண்காணிப்பு பொறியாளர் செந்துார், கட்டட வடிவமைப்பு கட்டுமானத் துறையின் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள், நவீன கட்டுமான முறைகள் மற்றும் பொறியாளர்களின் பொறுப்புகள் குறித்து விளக்கினார். மாணவர்களுக்கான பல்வேறு தொழிநுட்ப நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவுப் பரிமாற்ற நிகழ்வுகள் நடந்தது.
பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி ஆராய்ச்சி டீன் ஷாகுல் ஹமீது, ஐ.க்யூ.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ, சிவில் துறை தலைவர் அருண்ராஜா கலந்து கொண்டனர்.
மாணவி ஜெயப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி அக்க்ஷயா நன்றி கூறினார்.
