தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய வன உயிரின வார விழா விழிப்புணர்வு ஓவியப்போட்டி

தேசிய வன உயிரின வார விழா விழிப்புணர்வு ஓவியப்போட்டி

தேசிய வன உயிரின வார விழா விழிப்புணர்வு ஓவியப்போட்டி


UPDATED : அக் 07, 2026 01:19 PM

ADDED : அக் 07, 2026 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:19 PM ADDED : அக் 07, 2026 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
தேசிய வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்., 2 முதல், 8 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

இதில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தினர். அதில், 'வாழிடங்களை இணைப்போம், வனவிலங்குகளை செழிக்க செய்வோம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு ஓவியங்களை வரைந்தனர்.

காடுகள் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மாணவிகள் தங்களது படைப்புகளை வெளிப்படுத்தினர்.

நாமக்கல் வனச்சரகம் மற்றும் வனக்கோட்டம் சார்பில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார்.

அதே போல், ராசிபுரம், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளிலும் போட்டிகள் நடந்தன. 'வன வளங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்போட்டியின் முக்கிய நோக்கம்' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us