நீலகிரியில் இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கை மூன்று ஆயிரம் குழந்தைகளுக்கு பயிற்சி
நீலகிரியில் இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கை மூன்று ஆயிரம் குழந்தைகளுக்கு பயிற்சி
UPDATED : மார் 04, 2026 11:31 AM
ADDED : மார் 04, 2026 11:34 AM

ஊட்டி:
'இயற்கை பாதுகாப்பு குறித்து, 3 ஆயிரம் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது,'என, கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லுாரியில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், “நீலகிரியை பொறுத்த வரை காடும், மலைகளும் சேர்ந்த மாவட்டமாக உள்ளது. மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில், 50 அரசு பள்ளிகளில் பயிலும், 3 ஆயிரம் குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு இயற்கையை பாதுகாப்பது தொடர்பாகவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் அந்த மாணவர்களை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைத்து செல்லப்பட்டு அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாணவிகளும் இயற்கையை பாதுகாக்க முன்வர வேண்டும், என்றார்.
முன்னதாக, சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதுக்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள், 7 பேருக்கு கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, ஊட்டி வடக்கு வனச்சரகம் ஆரம்ப பிரிவு முத்தினாடு காவல் பகுதிக்கு உட்பட்ட வெண் லாக்வுடன்ஸ் காப்புக்காடு பகுதியில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் கஷாப்சசாங்ரவி, உதவி வன பாதுகாவலர் மணிமாறன், கல்லூரி முதல்வர் சுஜாதா, கல்லூரி செயலாளர் மோதிலால் கட்டாரியா உட்பட பல பங்கேற்றனர்.

