தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.சி.சி., 'ஏ' சான்றிதழ் தேர்வு 3,382 மாணவர்கள் பங்கேற்பு

என்.சி.சி., 'ஏ' சான்றிதழ் தேர்வு 3,382 மாணவர்கள் பங்கேற்பு

என்.சி.சி., 'ஏ' சான்றிதழ் தேர்வு 3,382 மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : பிப் 01, 2026 06:38 PM

ADDED : பிப் 01, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2026 06:38 PM ADDED : பிப் 01, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: என்.சி.சி., மாணவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் தேர்வில், 3,382 மாணவர்கள் பங்கேற்றனர்.

என்.சி.சி., பிரிவில் இடம் பெற்றுள்ள பள்ளி மாணவர்களுக்கு, 'ஏ' சான்றிதழ் ராணுவத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. 2 டி.என்., காம்போசிட் தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி., சார்பில் 'ஏ' சான்றிதழ் தேர்வு கோவை டவுன்ஹால் புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 21 பள்ளிகளின், 200 மாணவியர் உட்பட, 650 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

அணி நடைபயிற்சி, துப்பாக்கியை கழற்றி மாட்டுதல், கையாளுதல், ராணுவம் தொடர்பாக குறியீட்டு படங்களை பார்த்து இடத்தை கூறுதல் ஆகிய செய்முறை தேர்வுகள் நடந்தன.

2 டி.என்., காம்போசிட் தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி., கமாண்டிங் ஆபிசர் மோகித் சவுகான் தலைமையில், என்.சி.சி., அலுவலர் பாக்கியநாதன் உள்ளிட்ட பலர் தேர்வை கண்காணித்தனர்.

இதே போல், 2 டி.என்., பேட்டரிக்கான தேர்வு, ஒண்டிபுதுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் நடந்தது.

நவஇந்தியா ஹிந்துஸ்தான் பள்ளியில் கோர் டி.என்.பட்டாலியனுக்கான தேர்வு நடந்தது. 5 மாணவியர் பட்டாலியனுக்கான தேர்வு பிரசென்டேஷன் கான்வென்ட்டில் நடந்தது. மொத்தம் 3,382 மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us