தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி முகாம்


UPDATED : ஆக 12, 2026 04:16 PM

ADDED : ஆக 12, 2026 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 04:16 PM ADDED : ஆக 12, 2026 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி என்.சி.சி., குழுத் தலைமையகத்தில் என்.சி.சி., பிரிவின் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சி முகாமினை, ஒருங்கிணைந்த அதிகாரி கர்னல் மொஹந்தி துவக்கி வைத்தார். இம்முகாம் நேற்று துவங்கி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது.

இதில் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளை சேர்ந்த 300 என்.சி.சி., மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் உடற்பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி, விரிவுரைகள், செய்முறை பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும். கேடட்டுகளுக்கு வரைபடம் வாசித்தல், துப்பாக்கி சுடுதல், முதலுதவி, கள உத்திகள், தடைகளை தாண்டும் பயிற்சி, தகவல் தொடர்பு போன்ற செயல்பாடுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சி மூலம் மாணவர்களுக்கு நற்பண்பு, உடல் தகுதி, மன உறுதி, தலைமைத்துவ பண்புகள், ஒழுக்கம், குழுப்பணி, துணிச்சல், பொறுப்புணர்வு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய பாடங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us