UPDATED : ஜன 10, 2025 12:00 AM
ADDED : ஜன 10, 2025 07:23 AM

கோவை:
தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குநகரத்தின் துணை இயக்குநர் ஜெனரல் கமடோர் ராகவ், கோவை என்.சி.சி., தலைமையகத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
குழு தளபதி கர்னல் ராமநாதன், ஆய்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டார். ஆய்வில், பயிற்சி மற்றும் நிர்வாக விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.என்.சி.சி., செயல்முறைகளின் புதுமையான விஷயங்கள் விளக்கப்பட்டன. தொடர்ந்து, பட்டாலியன்களின் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கமடோர் ராகவ், ஊழியர்கள் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த கண்ணனுக்கு, கவுரவ மேஜர் பதவி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் ஐந்து நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த கவுரவ மேஜர் பதவி, கண்ணனின், 30ஆண்டு சேவைக்காக வழங்கப்பட்டது.