தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கிய தலைப்புகள் நீக்கமா? என்.சி.இ.ஆர்.டி., விளக்கம்

9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கிய தலைப்புகள் நீக்கமா? என்.சி.இ.ஆர்.டி., விளக்கம்

9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கிய தலைப்புகள் நீக்கமா? என்.சி.இ.ஆர்.டி., விளக்கம்


UPDATED : செப் 28, 2026 01:42 PM

ADDED : செப் 28, 2026 01:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 01:42 PM ADDED : செப் 28, 2026 01:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சி.பி.எஸ்.இ., ஒன்பதாம் வகுப்பு கணிதம் வரைவு பாடத்திட்டத்தில், முக்கிய தலைப்புகள் நீக்கப்படவில்லை என்றும், ஏ.ஐ., சார்ந்த நெறிமுறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன என்றும், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ஒன்பதாம் வகுப்பு கணித பாடத்திட்டத்தை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எனும், என்.சி.இ.ஆர்.டி., வடிவமைத்து வருகிறது.

இதற்கான வரைவு பாடத்திட்டம், கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

இந்த வரைவு பாடத்திட்டத்தில், பல முக்கியமான பகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, என்.சி.இ.ஆர்.டி., அளித்த விளக்கம்:


என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்ட வரைவு பாடத்திட்டம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளை பெறுவதற்கானது. அவர்களின் கருத்துகளின் அடிப்படையில், பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.

வரைவு பாடத்திட்டத்தில் இருந்து, எந்த ஒரு முக்கியமான தலைப்புகளும் நீக்கப்படவில்லை.

மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்த்து, புரிந்து படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு திறன் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால், கணிதத்தில் 'அல்காரிதம்' குறித்த புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us