தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தாமதம் 9ம் வகுப்பு மாத தேர்வுகள் ரத்து

என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தாமதம் 9ம் வகுப்பு மாத தேர்வுகள் ரத்து

என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தாமதம் 9ம் வகுப்பு மாத தேர்வுகள் ரத்து


UPDATED : ஏப் 22, 2026 12:08 PM

ADDED : ஏப் 22, 2026 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2026 12:08 PM ADDED : ஏப் 22, 2026 12:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் எனப்படும், என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப்புத்தகம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் நடக்க இருந்த, ஒன்பதாம் வகுப்பு மாதாந்திர தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு பெற்று, நாட்டில், 33,000க்கும் அதிகமான பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 9ம் வகுப்புக்கும், அடுத்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும், புதிய பாடப்புத்தகங்கள் வர உள்ளன. கடந்த 1ம் தேதி முதல், சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளுக்கு புதிய கல்வியாண்டு துவங்கி, பள்ளிகள் செயல்படுகின்றன.

இந்நிலையில், 9ம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள், ஏப்., 15ம் தேதிக்குள் கிடைக்கும் என, என்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்திருந்தார். ஆனால், 9ம் வகுப்புக்கான ஆங்கில புத்தகம் மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

ஒவ்வொரு மாதமும் முதல் மூன்று வாரங்கள் நடத்திய பாடங்களுக்கு, நான்காம் வாரத்தில் மாதத்தேர்வு நடத்துவது வழக்கம்.

ஆனால், இது வரை பாடப்புத்தகங்கள் கிடைக்காததால், என்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டத்தை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' எனும் இணைப்பு பாடமாக ஆசிரியர்கள் நடத்தி உள்ளனர்.

அவற்றை மாணவர்கள் நகல் எடுத்து படிக்க முடியாத சூழல் உள்ளதால், இந்த வாரத்தில் நடத்த வேண்டிய மாதாந்திர தேர்வுகளை ரத்து செய்துள்ளனர்.

ஆங்கில புத்தகத்தில் பாரதியார் பாடல் என்.சி.இ.ஆர்.டி., புத்தகத்தில், தென்மாநில வரலாறு மற்றும் எழுத்தாளர்கள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், தற்போது, ஒன்பதாம் வகுப்புக்கான ஆங்கில பாடப்புத்தகம், 'காவேரி' என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

இதில், பாரதியாரின் 'மண்ணும் இமய மலை எங்கள் மலையே' எனும் பாடல், 'பாரத் அவர் லேண்ட்' எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர் குறிப்பு பகுதியில், பாரதியின் தேச பக்தி, விடுதலைப் போராட்ட உணர்வு, அவரின் கவிப்புலமை உள்ளிட்ட பண்புகள் விளக்கப்பட்டுள்ளன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us