UPDATED : பிப் 08, 2025 12:00 AM
ADDED : பிப் 08, 2025 06:24 PM

புதுடில்லி:
இளநிலை நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்துகிறது. நாட்டின் மிகப் பெரிய நுழைவுத்தேர்வாக கருதப்படும் இளநிலை நீட் தேர்வை, ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், 2025ம் ஆண்டு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய நாட்கள்
விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்: பிப்., 7
பதிவு செய்ய கடைசி நாள்: மார்ச் 7
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: மார்ச் 7
நுழைவுச்சீட்டு வெளியிடும் நாள்: மே 1
தேர்வு நடக்கும் நாள்: மே 4
தேர்வு முடிவு வெளியிடும் நாள்: ஜூன் 14
தேர்வு நேரம்: 3 மணி நேரம்
தேர்வு நேரம் : மதியம் 2:00 முதல் மாலை 05:00 வரை
கட்டண விவரம்
பொதுப்பிரிவு மாணவர்கள்: ரூ.1700
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்: ரூ.1,600
எஸ்சி/எஸ்டி/3ம் பாலினத்தவர்கள்: ரூ.1000
வெளிநாட்டினர்: ரூ.9,500
இதனுடன் ஜி.எஸ்.டி., மற்றும் சேவைக்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.