UPDATED : மே 03, 2025 12:00 AM
ADDED : மே 03, 2025 04:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே 4ம் தேதி மதியம் 2:00 மணிக்கு துவங்க உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்டவற்றில் சேர, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும், நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட, 11 மொழிகளில் நடத்தப்படும், இந்த தேர்வை எழுத, 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான தேர்வு மைய விபரங்கள், ஏற்கனவே வெளியான நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி, neet.nta.nic.in என்ற இணையதளத்தில், நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டது.
நுழைவுச்சீட்டு, அடையாளச் சான்று கட்டாயம் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு ஏற்கனவே விளக்கப்பட்டு உள்ளன.

