நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி கைது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி கைது
UPDATED : மே 17, 2026 11:44 AM
ADDED : மே 17, 2026 11:44 AM
புதுடில்லி:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளியான புனேயை சேர்ந்த வேதியியல் விரிவுரையாளர் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2026 - 27ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேர கடந்த 3ம் தேதி நுழைவுத்தேர்வு நடந்தது. இத்தேர்வை நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டது. ரூ.30 லட்சத்துக்கு வினாத்தாள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பிவி குல்கர்னி என்ற இவர் வேதியியல் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். தேசிய தேர்வு முகமை சார்பாக தேர்வு தொடர்பான பணிகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், மே 3ம் தேதி நடந்த வினாத்தாள் அவருக்கு எளிதாக கிடைத்துள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
