UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:14 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் இறுதி பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி நடந்தது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர்.
புதுச்சேரியில் இருந்து எம்.பி.பி.எஸ்., பல்மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் படிக்க நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலை, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருந்துபெற்று புதுச்சேரி சுகாதார துறை https://health.py.gov.in/viewpdf?url=0&nid=3520 என்ற இணைய முகவரியில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 6,318 பேர் விண்ணப்பித்து எழுதி இடம் பிடித்துள்ளனர்.
மாணவர்கள் பாரதி, இமயவர்மன் ஆகியோர் தலா 695 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ள்ளனர். 650 மதிப்பெண்ணிக்கு மேல் 38 பேர், 600 மதிப்பெண்ணிற்கு மேல் 127 பேர், 500 மதிப்பெண்ணிற்கு மேல் 431 பேர் எடுத்துள்ளதால் இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., தேர்ச்சியில் கடும் போட்டி நிலவும். சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் ஆட்சேபனைகள் இருந்தால் சுகாதார துறையில் தெரிவிக்கலாம்.