UPDATED : ஏப் 28, 2025 12:00 AM
ADDED : ஏப் 28, 2025 10:33 AM

கடலூர்:
கடலூரில் தினமலர் நடத்திய நீட் மாதிரி தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தெளிவு கிடைத்தது
சரோஜினி, குறிஞ்சிப்பாடி: தினமலர் நடத்திய மாதிரி நீட் தேர்வில் பங்கேற்க வேண்டும் என ஆர்வமாக இருந்தது. மாதிரி தேர்வின் மூலம் அச்சம் நீங்கியுள்ளது. மாதிரி நீட் தேர்வில் விலங்கியல், தாவரவியலில் பாடங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமாக தான் இருந்தது.
இயற்பியல், வேதியியல் பாடம் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. தினமலர் நீட் மாதிரி தேர்வு எழுதியதால், தேர்வு விதிமுறைகளை தெரிந்துக்கொள்ளும்படியாக இருந்தது. நடக்க இருக்கும் நீட் தேர்வு பயம் இல்லாமல் எழுத முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீட் மாதிரி தேர்வு நடத்தி எங்கள் அச்சங்களை போக்கிய தினமலர் நாளிதழுக்கு நன்றி.
பயனுள்ளதாக இருந்தது
திருலோகசந்தர், கடலுார்:
நீட் மாதிரி தேர்வின் மூலம் அனைத்து விதிமுறைகளையும் தெரிந்துக்கொண்டேன். இது எங்களை போன்ற மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. இந்த தேர்வின் மூலம் அடுத்து எழுதப் போகும் தேர்வில் நாங்கள் பயம் இல்லாமல் எழுத உதவியாக இருக்கும்.
மூன்று மணி நேரத்தில் எப்படி தேர்வு எழுதுவது என்ற தேர்வு கையாளும் முறையை கற்றுக்கொள்ளும்படி இருந்தது. இந்த தேர்வில் செய்யும் தவறுகளை அடுத்த தேர்வில் நடக்காமல் இருக்க வாய்ப்பாகவும் உள்ளது.
சந்தேகம் தீர்ந்தது
விஜயபாரதி, பரங்கிப்பேட்டை:
மாதிரி நீட் தேர்வு மூலம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயம் போக்கப்பட்டு, அடுத்து எழுதப் போகும் நீட் தேர்வுக்கு பயன் உள்ளதாக உள்ளது. எனது மகள் முதல் முறையாக நீட் தேர்வு எழுத உள்ளதால், நீட் தேர்வின் போது என்ன உடை அணிய வேண்டும் என்பது முதல் விதிமுறைகள் ஒன்றும் தெரியாமல் பல சந்தேகங்கள் இருந்தேன்.
இங்கு வந்த பின்னர் தான் விதிமுறைகளை தெரிந்துக்கொண்டு தெளிவு கிடைத்தது. மாதிரி நீட் தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும்.
மாணவர்கள் நலனில் அக்கரை
மருதப்பன், சிதம்பரம்:
தினமலர் நாளிதழ், மருத்துவம் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்பெக்ட்ராவுடன் இணைந்து மாதிரி நீட் தேர்வு நடத்துவது பயனளிக்கும் வகையில் உள்ளது. இந்த தேர்வு மூலம் மாணவர்களுக்கு நீட் தேர்வின் விதிமுறைகளை தெரிந்துக்கொண்டு, நீட் தேர்வு அச்சத்தை போக்கும் வகையில் உள்ளது.
தினமலர் நாளிதழ், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கரை எடுத்துக்கொண்டு, வழிக்காட்டி, நீட் மாதிரி தேர்வு நடத்தப்படுவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தினமலர் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே எளிமைப்படுத்தும் வகையில் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
மாணவர்களுக்கு புத்துணர்வு
சுகுமாறன், நெய்வேலி:
நான் எனது மகனுடன் நெய்வேலியில் இருந்து வந்துள்ளேன். தினமலர் நாளிதழ் சார்பில் நடத்தப்படும் நீட் மாதிரி தேர்வு மாணவர்களுக்கு தேர்வு பயம் இல்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் அரசு நடத்தும் நீட் தேர்வில் எவ்வித பயமும் இன்றி அடுத்தடுத்து தேர்வு எழுத மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு எனர்ஜி
ப்ரீடா, ஸ்ரீமுஷ்ணம்:
இப்பகுதி மாணவர்களுக்கு நீட் தேர்வு இங்கு நடப்பது முதன்முறை. அந்த நீட் மாதிரி தேர்வை தினமலர் நடத்தியது பெருமையாக உள்ளது. நீட் மாதிரி தேர்வு தொடர்பாக பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கிய விதமும் அருமை. மாணவர்களுக்கு இத்தேர்வு சிறந்த எனர்ஜியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கேள்விகள் டப்
பாலகுரு, விருத்தாசலம்:
நீட் மாதிரி தேர்வு அருமையாக உள்ளது. வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் டப்பாக இருந்தது. உயிரியியல் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் அருமை. தினமலர் நாளிதழுக்கு நன்றி.
பங்கேற்றது பெருமை
சுஜி, காட்டுமயிலுார்:
நீட் மாதிரி தேர்வில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. அரசு நடத்தும் நீட் தேர்வில் பயமின்றி பங்கேற்று தேர்வு எழுத ஏதுவாக உள்ளது. கேள்விகள் கஷ்டமாக கேட்கப்பட்டிருந்தாலும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி உள்ளேன்.

