UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 09:33 AM
புதுச்சேரி :
அனைத்து துவக்க பள்ளிகளிலும் முன் மழலையர் பராமரிப்பு மற்றும் கல்வி வள மையம் அமைக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறையின் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு:
சி.பி.எஸ்.இ., விதிமுறைகளின்படி 126 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் தீ பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்படும். முன் மழலையர் வகுப்புகள் உள்ள அனைத்து துவக்க பள்ளிகளிலும் முன் மழலையர் பராமரிப்பு மற்றும் கல்வி வள மையம் அமைக்கப்படும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ளதை போன்று காரைக்கால், மாகி பகுதிகளில் புதிதாக நவீன சமையல் கூடங்கள் நிறுவப்படும். அரசு பள்ளிகளின் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு 10 சதவீதம் மருத்துவ கல்லுாரிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் 20 மாணவர்கள் பயன் பெற்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெரும் விகித்தை மேலும் உயர்த்தும் பொருட்டு, நடப்பாண்டு முதல் பிளஸ 1 மாணவர்களுக்கும் நீட் பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் உள்ளதை போன்று கிராமப்புற மாணவர்களுக்கான இரண்டு நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும். பள்ளி கல்வி துறைக்கு இந்தாண்டு 952.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.