UPDATED : ஜூலை 18, 2024 12:00 AM
ADDED : ஜூலை 18, 2024 11:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா:
நீட் வினாத்தாள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக இன்று 3 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை இன்று (ஜூலை 18) நடக்கவுள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணையில் பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பீகார் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 3 பேரை கைது செய்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.