நீட் வினாத்தாள் வெளியான வழக்கு: சி.பி.ஐ., 3-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
நீட் வினாத்தாள் வெளியான வழக்கு: சி.பி.ஐ., 3-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
UPDATED : அக் 06, 2024 12:00 AM
ADDED : அக் 06, 2024 09:44 AM

புதுடில்லி:
நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சி.பி.ஐ., நேற்று மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் எழுந்தது.
மே 5ல் நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பீஹாரில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிராவில் 2 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனை ஏற்று, நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடி தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூனில் விசாரணையை துவக்கி நடத்தி வந்தனர். இதனையடுத்து பீஹார் மாநிலம் பாட்னா கோர்ட்டில் நேற்று 21 பேர் மீது மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆக.01-ல் 13 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகையும், செப்.20-ல் 6 பேர் மீது இரண்டாவது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இந்நிலையில் நேற்று மூன்றாவது குற்றப்பத்திரிக்கை என இதுவரை 40 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.,