நீட் மறுதேர்வு: விமானப்படை ஹெலிகாப்டர்களில் பயணிக்கும் வினாத்தாள்
நீட் மறுதேர்வு: விமானப்படை ஹெலிகாப்டர்களில் பயணிக்கும் வினாத்தாள்
UPDATED : ஜூன் 09, 2026 10:13 AM
ADDED : ஜூன் 09, 2026 10:14 AM

புதுடில்லி:
நீட் மறு தேர்வுக்கான வினாத்தாள் விமானப்படை ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வரும் 21ம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் எந்த குளறுபடியும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி வினாத்தாளை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் விமானப்படையின் எம்.ஐ., 17 ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட உள்ளது. சீல் வைக்கப்பட்ட வினாத்தாள்கள், பிராந்திய மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
பாதுகாப்பாகவும், குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாள் உள்ளிட்ட தேர்வுக்கான பொருட்களை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வினாத்தாள் கசிவது தடுக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
