UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 09:09 AM
சென்னை:
நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வில் அதிக மதிப்பெண் பெற, ரிப்பீட்டர் பயிற்சிக்கான பதிவு துவங்கியுள்ளதாக, ஆகாஷ் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வில், அதிக தேர்ச்சி மற்றும் மதிப்பெண் பெற்ற மாணவர்களை, ஆகாஷ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. நீட் அல்லது ஜே.இ.இ., தேர்வில் முதல் முயற்சியில் மதிப்பெண் குறைந்து விட்டதா; மாணவர்கள் ஆகாஷ் நிறுவனத்தில், ரிப்பீட்டர் பயிற்சியில் சேர்ந்தால், தங்கள் கனவை நனவாக்கும் வகையில், அதிகபட்ச மதிப்பெண்களை பெற முடியும்.
கடந்த, 35 ஆண்டுகளாக செயல்படும் ஆகாஷ் நிறுவனம், நாட்டின் சிறந்த பயிற்சி ஆசிரியர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவர்கள், நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சியில் நிபுணர்களாக உள்ளனர். பயிற்சியுடன் தீவிர தேர்வுகள், மதிப்பீட்டு முறையை கொண்டு, மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்தும் பயிற்சிகள் வழங்குகின்றனர்.
வரும் 2025ம் ஆண்டு நடத்தப்பட உள்ள நீட் அல்லது ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்று, அதிக மதிப்பெண் பெற திட்டமிட்டிருந்தால், அதற்கு ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தில், இன்றே பதிவு செய்து சேரலாம். கட்டணத்தில், 90 சதவீதம் வரை கல்வி உதவித்தொகை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.