தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி


UPDATED : ஜூலை 17, 2026 08:49 PM

ADDED : ஜூலை 17, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2026 08:49 PM ADDED : ஜூலை 17, 2026 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர உதவும் இந்தாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு, மே 3ம் தேதி நடந்தது. இதில் வினாத்தாள் கசிவு காரணமாக, ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடந்தது.

இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 16ல் வெளியிட்டது. இந்தத் தேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 58 சதவீதம் பேர் மாணவிகள்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவின் பன்ஷூல் ஆகியோர் 720க்கு 716 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் எடுத்துள்ளார்.

138 பேர் 690 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அதில் 93 சதவீதம் பேர் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றனர்.

19 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேலும்; 1,492 பேர் 659க்கு மேலும்; 10,160 பேர் 600க்கு மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

500க்கு மேல் 90,780 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 1.7 லட்சம் பேரும், குறைவாக லட்சத்தீவு 43 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 17 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us